மே 25, 2022
NERDC மற்றும் NIPHM ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் நிறுவன மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றன.
இலங்கையின் தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (NERDC) , இலங்கையின் அறுவடைக்குப் பிந்தைய முகாமைத்துவத்திற்கான தேசிய நிறுவனம் (NIPHM) ஆகிய இரண்டு தேசிய நிறுவனங்களுக்கிடையில் பொதுவான விடயங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கைச்சாத்திடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையில் உணவு உற்பத்தியின் அறுவடை இழப்பைக் குறைப்பதில் பரவலாக கவனம் செலுத்தும் அத்தோடு கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு உதவும். ஆத்தோடு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் நிறுவன மேம்பாடு ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் கூட்டு ஆர்வத்தை மேம்படுத்துதல். பொறியியல் உள்ளீடுகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வு உருவாக்கம் தேவைப்படும் NIPHM ஆல் நடத்தப்படும் திட்டங்களில் ஒத்துழைக்க NERDC திட்டமிட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், NERDC மற்றும் NIPHM ஆகியவை எதிர்கால தொழிலாளர் தேவைகள் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு முயற்சிகள், அறிவு பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாடு மூலம் நிறுவன ஆராய்ச்சி மற்றும் கல்வி ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் மனித திறனை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில் துறை கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துதல் என்பவற்றிலும் ஒன்றிணைகின்றன. Nநுசுனுஊ மற்றும் NஐPர்ஆ இடையேயான ஒத்துழைப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு தரப்பினருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும்.