விளக்கு பரிசோதனை ஆய்வுக்கூடம்
உங்கள் விளக்கின் தரம் மற்றும் அதன் பல்வேறு குணாதிசயங்கள் மிக உயர்ந்த தரத்தில் சோதிக்கப்படும் விளக்கு சோதனை ஆய்வகம். இதன் மூலம் பொது கட்டிடங்களில் உயர்தரத்தினாலான விளக்குகளை உருவாக்க மற்றும் பராமரிக்கவும் அத்தோடு இறக்குமதிக்கான தரப்படுத்தப்பட்ட செயல்முறையை உறுதி செய்யவும் தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பேட்டரி சோதனை ஆய்வுக்கூடம்
பேட்டரி சோதனை ஆய்வகத்தில் இதே போன்ற சேவை வழங்கப்படுகிறது. வாகன பேட்டரிகள் விற்பனைக்காக திறந்த சந்தைக்கு வெளியிடப்படுவதற்கு முன், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு உட்பட்டதா என சரிபார்க்கப்படுகின்றன.
குளிர்சாதன பெட்டி சோதனை ஆய்வகம்
குளிர்சாதனப் பெட்டி சோதனை ஆய்வகம் ஒரே நேரத்தில் மூன்று குளிர்சாதனப் பெட்டிகளை சோதிக்கும் திறன் கொண்டது. இந்த ஆய்வகம் அனைத்து வகையான சோதனைகளையும் செய்கிறது, சர்வதேச தரத்தை கொண்டது. சந்தையில் குளிர்சாதன பெட்டிகளை வெளியிடுவதற்கு முன்பு இவை அனைத்தையும் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும்.
கழிவு நீர் சோதனை ஆய்வகம்
தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீரை பரிசோதிப்பதற்காக கழிவு நீர் பரிசோதனை ஆய்வகம் உள்ளது. மற்றும் Nநுசுனுஊ அறிமுகப்படுத்திய கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பு ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ளத்தக்கது.
இழுவிசை சோதனை அலகு
இது முன் வார்க்கப்பட்ட கான்கிரீட் அல்லது கான்கிரீட் கூறுகளின் இழுவிசையைச் சோதிப்பதற்கான முறைமையாகும்.
கான்கிரீட் தொகுதி சோதனை அலகு
நுசுனுஊ யிடம் சொந்தமாக கான்கிரீட் தொகுதி சோதனை அலகு காணப்படுகிறது , இது கான்கிரீட் தொகுதிகளின் தரநிலைகளை சோதிக்க பயன்படுகிறது.
மண் பரிசோதனைப் பிரிவு
இந்த அலகு சிமென்ட் மண் தொகுதிகளை உற்பத்தி செய்வதற்கு மண்ணின் பொருத்தப்பாட்டை சோதனை செய்ய உதவுகிறது.